உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணக்கம்பாளையம் பள்ளி 97 சதவீத தேர்ச்சி

கணக்கம்பாளையம் பள்ளி 97 சதவீத தேர்ச்சி

பெருமாநல்லூர் : திருப்பூர் அருகேயுள்ள கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 97 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியில் தேர்வு எழுதிய, 194 பேரில் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சஞ்சனா, 486 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், தர்ஷன், 480 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், பெபின், 475 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் தேர்ச்சி அடைந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிளா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்சண்முகசுந்தரம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சவுந்தரராஜன், மேலாண்மை குழு தலைவர் சாந்தி பிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை