உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேந்திரிய வித்யாலயா பள்ளி எம்.பி., சுப்பராயன் வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளி எம்.பி., சுப்பராயன் வலியுறுத்தல்

திருப்பூர்;மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் எழுதியுள்ள கடிதம்: மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் நாடு முழுதும், 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஜவுளி மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான தொழில்துறை மையமாக திருப்பூர் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்களில், எட்டு லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தை மூலம், 70 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் ஆண்டுதோறும் நடக்கிறது. இந்நிறுவனங்களில் தமிழகம் மட்டுமல்லாது பீஹார், ஒடிசா, உ.பி, ஜார்கண்ட், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.ஏற்றுமதி மற்றும் தொழில் நகரமான, திருப்பூரில் வருமான வரித்துறை, வருங்கால வைப்பு நிதி அலுவலகம், எல்.ஐ.சி., தபால் அலுவலகம் உட்பட பல மத்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. திருப்பூர் லோக்சபா தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை துவக்க வேண்டும். இப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., கல்விமுறை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அவர்கள் பணி மாறுதல் பெற்று, இந்தியாவில் எந்த இடத்துக்கு சென்றாலும், மீண்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மூலம், அதே கல்வியை தொடர முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, புதிதாக, 57 கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்கப்பட உள்ள தில், திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி