உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுநீரக பரிசோதனை முகாம்

சிறுநீரக பரிசோதனை முகாம்

திருப்பூர் : ரேவதி மெடிக்கல் சென்டரின் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரிலுள்ள ரேவதி மருத்துவமனையில், சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரிஷ் சிவஞானம் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. இதில் சர்க்கரை அளவு, யூரியா, யூரிக் ஆசிட், கிரியாட்டினின் சிறுநீர் பரிசோதனை நடைபெறும். சிறுநீரக மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணர்களின் ஆலோசனை இலவசமாக வழங்கப் படுகிறது. இந்த முகாமில் சிறுநீர் தொற்று, சிறுநீரக பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, டயாலிசிஸ் தேவைப்படுவோர்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன், கை, கால் வீக்கம் உள்ளவர்கள் மற்றும் தங்கள் சிறுநீரக நலனை அறிந்து கொள்ள நினைப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கு 98422 09999 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ