மேலும் செய்திகள்
சி.கோபாலபுரத்தில் ரேக்ளா போட்டி
18-Jan-2025
திருப்பூர்; குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த முகாம்களில் பங்கேற்று பலர் நேற்று ரத்ததானம் வழங்கினர்.திருப்பூர், வாலிபாளையம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் சேவா பாரதி, சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கோட்டத் தலைவர் விஜயகுமார் திருவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் ஸ்டாலின்கிருஷ்ணா, இணைச் செயலாளர் அருண், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சுவாமி விவேகானந்தா ரத்த நிலைய மேலாளர் மகாராஜன், டாக்டர் ஷர்மா தலைமையிலான குழுவினர் தன்னார்வலர்களிடம் இருந்து, 50 யூனிட் ரத்தம் சேகரித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், ஜெயந்தி, சிவமலர் ஒருங்கிணைத்தனர்.l இடுவம்பாளையம் துவக்கப்பள்ளியில், சிகரங்கள் அறக்கட்டளை சார்பில், 88வது ரத்ததான முகாம் நடந்தது. உடுமலை அரசு மருத்துவமனை டாக்டர் குழுவினர், 60 யூனிட் ரத்தம் தானமாக பெற்றனர். தொடர்ந்து, பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம், எலும்பு மூட்டு வலி சிகிச்சை முகாம் நடந்தது.தி ஐ பவுண்டேஷன் சார்பில் 88 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 30 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.ரேவதி மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. கிருஷிவ் மருத்துவமனை சார்பில் 32 பயனாளிகள் இலவசமாக எலும்பு மூட்டு வலி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக, சிறப்பு மருத்துவ முகாமை, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் துவக்கி வைத்தார். சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
18-Jan-2025