உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

கே.எம்.சி., பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா

திருப்பூர்; பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின், 17ம் ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைவர் சண்முகம், லோகநாயகி, முன்னிலை வகித்தனர். தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட அரசு சுகாதார அலுவலர், டாக்டர் ஜெயந்தி சிறப்பு விருந்தினராகவும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுசெயலாளர் திருக்குமரன் கவுரவ விருந்தினராகவும் பங்கேற்று, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். டாக்டர் ஜெயந்தி பேசுகையில், '' கல்வியுடன் கூடிய விளையாட்டு, நல்ல முறையில் வாழ்வில் முன்னேற மாணவர்களுக்கு வழிகாட்டும்,'' என்றார். ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் திருக்குமரன் பேசுகையில், குழு அளவிலான பணியே வெற்றி பெறும். தோல்வியைக் கண்டு துவழாது வெற்றிப்பாதையை உருவாக்க வேண்டும். மாணவர்கள் பலரும் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக உருவாக வேண்டும், என்றார்.பள்ளி முதல்வர், தனலட்சுமி முரளிதரன், விளையாட்டு விழாவின் ஆண்டறிக்கையை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளித்தலைமை ஆசிரியை பிரேமலதா, பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா பள்ளியின் விளையாட்டு விழா குறித்து பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை