நிட்டிங் உரிமையாளரின் தோழன் மாலா டிரேடர்ஸ்
திருப்பூர் : ஜப்பானிய தொழில்நுட்பத்தில், சீனாவில் தயாரிக்கப்படும் அதிநவீன நிட்டிங் இயந்திரங்களை, நாடு முழுவதும் வினியோகித்து வருகிறது, 'மாலா டிரேடர்ஸ்' நிறுவனம்.இந்நிறுவனம், புதிய நிட்டிங் மெஷினை நேற்று, 'நிட்ஜோன்' கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. 'பாடி சைஸ் சிங்கிள் ஜெர்சி' நிட்டிங் மெஷின் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.'டாஸ்மா' தலைவர் அப்புக்குட்டி, 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர். 'மாலா டிரேடர்ஸ்' உரிமையாளர் பிரசாத் வரவேற்றார். தொழில் அமைப்பினர், புதிய நிட்டிங் மெஷினை அறிமுகம் செய்து வைத்த பார்வையிட்டனர்.'மாலா டிரேடர்ஸ்' உரிமையாளர் பிரசாத் கூறியதாவது:உள்ளாடைகள் தயாரிக்க ஏற்ற துணிகளை, இவ்வகை நிட்டிங் மெஷி னில் உற்பத்தி செய்யலாம். இதுவரை, 24 மற்றும் 28 'கேஜ்' அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டது. புதிய மெஷினில், '4 டிரேக்' இருப்பதால், 30 'கேஜ்' வரை உற்பத்தி செய்யலாம்; மேலும், 32 44 'கேஜ்' வரையிலும் உற்பத்தி செய்ய முடியும்.இந்த ஒரே மெஷினில், 'ஏர்டெக்ஸ்', 'லுாப்நெட்,' 'ஹனிகோம்பிடு', பாகஸ் உட்பட பல்வேறு வகையான டிசைன்களில் துணி உற்பத்தி செய்யலாம்.அதிகபட்சமாக, 60 ஆர்.பி.எம்., வேகத்தில் இயக்கலாம். 'ஆன்ட்டி கிளாக்' முறையில் சுழலும் என்பதால், ஷிப்டுக்கு, 120 கிலோ வரையிலும், ஒருநாளைக்கு 240 கிலோ வரை, மிருதுவான துணி உற்பத்தி செய்யலாம்.மேலும், 'ரிப்' நிட்டிங் மெஷின்களும் கண் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 97880 89300 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.