உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கொங்கு பன்னாட்டு வர்த்தக நிறுவனம் முப்பெரும் விழா நாளை துவக்கம்

 கொங்கு பன்னாட்டு வர்த்தக நிறுவனம் முப்பெரும் விழா நாளை துவக்கம்

திருப்பூர்: கொங்கு வர்த்தக கூட்டமைப்பு சார்பில், கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் (கிட்கோ) முப்பெரும் விழா, திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நாளை துவங்குகிறது. திருப்பூர் கொங்கு வர்த்தக கூட்டமைப்பு சார்பில், கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாசார நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தின் முப்பெரும் விழா நடக்கிறது. நாளை கொங்கு நாட்டு பொருட்காட்சி திறப்பு விழா, 27ம் தேதி 'கிட்கோ' 4வது ஆண்டு துவக்க விழா, 28ம் தேதி கொங்கு வர்த்தக கூட்டமைப்பின், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளன. கொங்கு நாட்டு பொருட்காட்சி திறப்பு விழாவுக்கு, ராம்ராஜ் காட்டன் குழும நிறுவனர் மற்றும் சேர்மன் நாகராஜன் தலைமை வகிக்கிறார். எம்.எல்.ஏ. ஈஸ்வரன், சண்முகவேல் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கந்தசாமி சிறப்புரையாற்றுகின்றனர். 'கிட்கோ' நான்காம் ஆண்டு துவக்க விழாவில், குமரகுரு இன்ஸ்டிடியூஷன் சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகிக்கிறார். ரூட்ஸ் குழும சேர்மன் ராமசாமி, பி.எஸ்.பி. குழும சேர்மன் பழனி பெரியசாமி, பெஸ்ட் கார்ப்பரேஷன் துணை தலைவர் ராஜ்குமார் ராமசாமி, மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட் சேர்மன் கந்தசாமி, ஸ்கை குழும தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் பேசுகின்றனர். வரும், 28ம் தேதி, பொங்கல் விழா, ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ் நிறுவனர் 'ஆம்ஸ்ட்ராங்' பழனிசாமி தலைமையில் நடக்கிறது. விளையாட்டு போட்டிகள், கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம், அன்னமார் கருப்பராயன் ஆட்டம், பூப்பறித்தல் கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை