உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்

 குமரலிங்கம் காசி விஸ்வநாதருக்கு வரும் 30ல் கும்பாபிேஷகம்

உடுமலை: மடத்துக்குளம் அருகே குமரலிங்கத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த காசி விசாலாட்சியம்மன் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலும், அருகில், தத்தாத்ரேய சுவாமி கோவிலும் அமைந்துள்ளன. கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக விழா வரும், 25ம் தேதி, காலை, 7:00 மணிக்கு மேல் மங்கள இசையுடன் துவங்குகிறது. பின்னர் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. வரும், 26ம் தேதி சாந்தி ேஹாமம், திசா ேஹாமமும், வரும் 27ம் தேதி காலை, 8:00 மணிக்கு, அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், வரும், 28ம் தேதி இரண்டாம் கால யாக வேள்வி துவங்குகிறது. வரும், 30ம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக வேள்வி துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் அனைத்து பரிவார விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், விசாலாட்சி அம்பிகை உடனமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ