உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 29ல் கும்பாபிேஷகம்

முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 29ல் கும்பாபிேஷகம்

திருப்பூர்; முருகம்பாளையம், ஸ்ரீமாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 29ல் நடக்கிறது. அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் அடுத்த முருகம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த 2012 அக்., 29ல், கும்பாபிேஷகம் நடந்தது. பனிரெண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், வரும், 29ம் தேதி காலை, ஆதீனகர்த்தர்கள் முன்னிலையில், கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜை, 26ம் தேதி துவங்குகிறது. வரும், 29ம் தேதி காலை, ஏழாம் கால வேள்வி பூஜைகள் நிறைவு பெற்று, காலை, 6:45 மணிக்கு, கிழக்கு பிள்ளையார் கோவில் கும்பாபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து, 7:45 மணிக்கு, எல்லை பிள்ளையார், 9:15 மணிக்கு மேற்கு பிள்ளையார் கோபுரம், ஸ்ரீமாகாளியம்மன் கோபுரம் கும்பாபிேஷகமும், 9:45 மணிக்கு விநாயகர் கும்பாபிேஷகம், 10:00 மணிக்கு மாகாளியம்மன் கும்பாபிேஷகமும் நடக்க உள்ளது. மகாதரிசனம், தசதானம், தசதரிசனம் போன்ற பூஜைகள் நடக்கிறது. மாலையில், திருக்கல்யாண உற்சவமும், மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதியுலாவும், முளைப்பாலிகை தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. 26ல் கும்மி ஆட்டம், 27ல் ஒயிலாட்டம், கம்பத்தாட்டம், 28ல் அனந்த கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு, 29ல் புலவர் ராமலிங்கம் தலைமையிலான பட்டிமன்றம் என கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள், விழா கமிட்டியினர், திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ