சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஜூலை 7ல் கும்பாபிேஷகம்
திருப்பூர்; திருப்பூர், குத்துாஸ்புரம் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், மஹா கும்பாபிேஷகம், தொட்டப்ப பெருவிழா, ஜூலை 7ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, 2ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.வரும் 4ம் தேதி, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து, புனித தீர்த்தம் எடுத்து வருதல்,முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.மஹா சக்தி அழைப்பு, மஹா சக்தி எழுந்தருளல், மஹாஜோதி அழைப்பு என, 20ம் தேதி வரை, பல்வேறு பூஜைகள் நடக்கின்றன.கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கத்தி போட்டு சாமுண்டி அம்மனை அழைத்து வருதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளன.கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, கோவில் கமிட்டியினர், மைசூரில் உள்ள மஹா சாமுண்டீஸ்வரி கோவில் சென்று, அங்கிருந்து நேற்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அனைத்து புண்ணிய நதிகளில் இருந்தும் தீர்த்தம் எடுத்துவரப்பட்டது.கும்பாபிேஷக விழா யாக சாலை பூஜை மற்றும் அபிேஷக பூஜைகளுக்கு புனித தீர்த்தம் பயன்படுத்தப்படுமென, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.