மாகாளியம்மன் கோவிலுக்கு 7ம் தேதி கும்பாபிேஷகம்
அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த 3 - -செட்டிபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா, கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. நேற்று முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக வெங்கடேஸ்வரா நகர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையை தொடர்ந்து, அங்கிருந்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகை எடுத்து கொண்டு பட்டாசு வெடிக்க, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மதியம் விநாயகர், மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு திருமுருகன்பூண்டி திருமுருகநாத கோவிலில் இருந்து, 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.கும்பாபிேஷக விழாவில், இன்று இரவு 9:00 மணிக்கு வள்ளி ஒயில் கும்மியாட்டம். நாளை இரவு 9:00 மணிக்கு பெருஞ்சலங்கையாட்டம் மற்றும் காராளன் கம்பத்தாட்டம் நடக்கிறது. வரும், 7ம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 5:00 மணிக்கு மாகாளியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வளர்மதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.