உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொதுத்தேர்வு மாணவருக்கு நாளை முதல் ஆய்வக பயிற்சி 

பொதுத்தேர்வு மாணவருக்கு நாளை முதல் ஆய்வக பயிற்சி 

திருப்பூர்;பிப்., இரண்டாவது வாரம் செய்முறை தேர்வு நடக்கவுள்ள நிலையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக பயிற்சி நாளை முதல் துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவருக்கு, மார்ச், 1ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச், 4ம் தேதி பொதுத்தேர்வு துவங்குகிறது. அதற்கு, 15 நாட்களுக்கு முன்பாக செய்முறை தேர்வை முடிக்க தேர்வுத்துறை ஆயத்தமாகி வருகிறது. ஆகையால், பிப்., 12 முதல், 17ம் தேதி வரை செய்முறை தேர்வை நடத்தி முடிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதவுள்ள, மாணவ, மாணவியரை செய்முறை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாக, நாளை (18ம் தேதி) முதல் பள்ளிகளில் ஆய்வக பயிற்சி துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் இருந்து, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ