உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர் போராட்டம்

பல்லடம்; அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், சம்பளம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நிறுவனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஐந்து வாரத்துக்கு மேலாக சம்பளத்தை வழங்கவில்லை என்றும், ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் நிலுவையில் உள்ளது என்றும் கூறிய தொழிலாளர்கள், நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அருள்புரத்தில் பரபரப்பு நிலவியது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ