மேலும் செய்திகள்
சென்னை வக்கீல் கொலை வழக்கு போலீசாருக்கு கெடு
06-Aug-2025
திருப்பூர்; தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர், முருகானந்தம், 41. சென்னை ஐகோர்ட் வக்கீல். கடந்த, ஜூலை, 28ல், கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம், வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக, முருகானந்தத்தின் சித்தப்பாவும், தனியார் பள்ளி தாளாளருமான தண்டபாணி உட்பட, 17 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகள், குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். இதில், தண்டபாணி, நாட்டுதுரை, தட்சிணாமூர்த்தி ஆகியோர், ஜாமின் கேட்டு, திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு செய்ததில், அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.வழக்கில் தொடர்புடைய முருகானந்தம், பாலமுருகன், அண்ணாதுரை, சுதர்சன், சசிகுமார், சதீஷ்குமார் ஆகியோர் ஜாமின் கேட்டு, முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு செய்தனர். அதே போன்று, சுந்தரம், ராம், நாகராஜன், தட்சிணாமூர்த்தி ஆகிய, 4 பேரும் மனு செய்தனர். விசாரணை, நேற்று மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கொலையான முருகானந்தத்தின் தாய் சுமித்ரா தேவி தரப்பில், வக்கீல் முருகேசன் ஆஜராகி, ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்தார். கொலை வழக்கில் கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாலும், புலன் விசாரணை நடந்து வருவதாலும் ஜாமின் வழங்கக் கூடாது எனவும், வாதிட்டார். தொடர்ந்து, 10 பேரின் ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
06-Aug-2025