உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

பொள்ளாச்சி : பாலக்காடு மாவட்டம், சித்துார் அரசுக் கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம் சார்பில் செல்லன் கோவிந்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வு நடந்தது.முன்னதாக, இணைப் பேராசிரியர் சல்மாமகஜபீன், அனைவரையும் வரவேற்றார். சொற்பொழிவை, கல்லுாரி முதல்வர் ரெஜி, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் வெங்கடாசலபதி கலந்து கொண்டார்.பின், 'தென்மாநில வரலாறு புதிய ஆவணங்கள்' என்ற தலைப்பில் விளக்கிப் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் முத்துலட்சுமி, அட்டப்பாடி அரசுக் கலைகல்லுாரி முதல்வர் சிவமணி, பாலக்காடு அரசு விக்டோரியாக் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் சுஜானாபானு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சுஜாதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை