உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறைவனின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிப்போம்

இறைவனின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிப்போம்

அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில், ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஜெயமூர்த்தி பேசியதாவது:நம்மை அறியாமல் செய்கின்ற பாவங்களுக்கு, இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து விதிவிலக்கு உண்டு. ஆனால், தெரிந்தும் தப்புக்கு துணை நின்றால், ஈரேழு பிறவிக்கு பாவத்தின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.விரோதிக்கு கூட நம் மனதால், கெட்டது நடக்க வேண்டும் என எண்ணக் கூடாது. யாரையும் சபிக்கக்கூடாது. நம்மை சுற்றிலும் நல்ல செயல், எண்ண அதிர்வுகளை தோற்றுவிக்க வேண்டும்.எந்தவொரு செயலும், நல்லவையாகவும், தீயவையாகவும் செயலாக்கம் அடைவது, மனிதனின் அளப்பரிய ஆற்றல் உடைய மனதால். அதனால், இறைவனின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிக்க வேண்டும். யார் ஒருவர் தம்மைச் சார்ந்தவர்களும் சுற்றி உள்ளவர்களும் நலமுடன் வளமுடன் வாழ எண்ணுகிறார்களோ, அவர்களுடைய குடும்ப சுபிட்சத்தை இறைவன் கை துாக்கி விடுவான்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை