மேலும் செய்திகள்
கலாமுக்கு பசுமை அஞ்சலி
28-Jul-2025
திருப்பூர்; வெற்றி அறக்கட்டளை சார்பில் செயல்படுத்தப்படும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டில் துவங்கி கடந்த 10 ஆண்டுகளில் 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது பயன் தரும் மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. இந்நிலையில், 11வது திட்டம் வாயிலாக, மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், ஆர்வம் உள்ள பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு சொந்தமான இடத்தில், மண் பரிசோதனை செய்து, தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மட்டும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு திட்டத்தில் இதுவரை, 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, முதலிபாளையம் அடுத்த மாணிக்காபுரம்புதுாரில், ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான வயக்காடு தோட்டத்தில், 2,200 மலை வேம்பு வகை மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் பங்கேற்று மரக்கன்று நட்டு வளர்க்க ஆர்வமும், இட வசதியும் உள்ளவர்கள், 90470 86666 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
28-Jul-2025