உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுாலகம்; அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நுாலகம்; அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

உடுமலை; உடுமலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 6வது திருப்பூர் மாவட்ட மாநாடு இரு நாட்கள் நடந்தது. 22ம் தேதி, பிரதிநிதிகள் மாநாடு, 23ம் தேதி, மகளிர் துணைக்குழு மாநாடு, பேரணி மற்றும் பொது மாநாடு ஆகியவை நடந்தது.இதில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, துறை சார்ந்த பணி, ஆய்வுக் கூட்டங்களுக்காக வரும் அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அறை, உணவருந்தும் அறை, நுாலகம், மனமகிழ் மன்றம் அமைக்கவும், அரசு ஊழியர் சங்கம் சார்பில் படிப்பகம் மற்றும் சேவை மையம் அமைக்க அறை ஒதுக்க வேண்டும்.அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற செல்லும் அரசு ஊழியர்களிடம், பல மடங்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக, ராணி, செயலாளராக பாலசுப்ரமணியம், பொருளாளராக முருகசாமி, துணைத்தலைவர்கள், மதன்குமார், அந்தோணி ஜெயராஜ், பாண்டியம்மாள், புஷ்பவள்ளி, இணைச்செயலாளர்களாக, ராமன், ராணி, மேகலிங்கம் வைரமுத்து, தணிக்கையாளர்கள், பசுபதி, மார்க்கண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை