உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / யோகா கற்றுக்கொண்டால் வாழ்க்கை ஆஹா! பள்ளி, கல்லுாரிகளில் யோகாசனம் செய்து அசத்தல்

யோகா கற்றுக்கொண்டால் வாழ்க்கை ஆஹா! பள்ளி, கல்லுாரிகளில் யோகாசனம் செய்து அசத்தல்

பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.* பொள்ளாச்சி சுந்தரகவுண்டனுார் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து, பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். தலைமையாசிரியர் ரமாதேவி தலைமை வகித்தார். பள்ளியின் ஆலோசகர் கோபாலசாமி, புலவர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் ரமேஷ்பாபு, யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.*திவான்சாபுதுார் கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில், ஆனைமலை சுவாமி விவேகானந்தா கேந்தரா தலைவர் வக்கீல் திருஞான சம்மந்தம், பொள்ளாச்சி பொறுப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் யோகா குறித்து பேசினர்.மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்தும், பலவித யோகாசனங்கள் செய்து திறமையை வெளிப்படுத்தினர். பள்ளி தாளாளர் கலையரசி, நிர்வாக இயக்குனர் கீர்த்திகிரி, தலைமை செயல் அதிகாரி தாராஸ்ரீ, முதல்வர் முத்துலட்சுமி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* பொள்ளாச்சி வாழும் கலை அமைப்பு சார்பில், யோகா தினம், போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில், ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் மற்றும் போலீசார் பங்கேற்று யோகாசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை வாழும் கலை அமைப்பு ஆசிரியர் ராஜேஷ், மாவட்ட மேம்பாட்டு உறுப்பினர் கேசவன் ஆகியோர் செய்து இருந்தனர்.* கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில் மாணவர்கள் யோகாசனம் செய்தனர். அதில், சூரிய நமஸ்காரம், தாடாசனம், வீரபத்ராசனம், வஜ்ராசனம், சுகாசனம், ஷவாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.* என்.ஜி.எம்., கல்லுாரியில், மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய சேவை திட்டம் மற்றும் யோகா மற்றும் தியான கழகம் சார்பில், 'ஆரோக்கியமான உலகத்துக்கான யோகா' என்ற தலைப்பில் நகிழ்ச்சி நடந்தது. மனிதவள மேம்பாட்டு துறை உதவி பேராசிரியர் வீரசித்தி விநாயகன் பேசினார். கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன் தலைமை வகித்தார். டீன் முத்துக்குமரன், மனவளக்கலை மன்ற செயலாளர் ஜோதிகுமார் பேசினர்.உதவி பேராசிரியர் சேட்டு, யோகாசன பயிற்சி அளித்தார்.* மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், என்.சி.சி., கட்டுப்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வால்மெருடா ஒய்நாம் தலைமை வகித்தார். அதில், 600 என்.சி.சி., அதிகாரிகள், நிரந்தர பயிற்றுநர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இணை பேராசிரியர் கேப்டன் சரவணக்குமார், பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் கதிரேஷ்குமார் ஆகியோர் சர்வேதச யோகா தினத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

உடுமலை

* உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி மற்றும் உடுமலை மனவளக்கலை மன்றம் சார்பில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் யோகா பயிற்சி செய்தனர். தொடர்ந்து மனவளக்கலை அமைப்பினர் யோகா செய்வதால் ஏற்படும் உடல்நல நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர். யோகா பயிற்சி தொடர்ந்து செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.* கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு ஆசனங்கள் பயிற்சி செய்தனர். யோகா ஆசிரியர் செல்விமுத்துப்ரியா யோகாவின் வாயிலாக, மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தனர். மாணவர்கள் நாள்தோறும் யோகா செய்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.* கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் யோகாசனங்கள் செய்தனர். பள்ளியில் உணவு திருவிழாவும் நடந்தது.பள்ளியில் 'சேயோன் தமிழ் மன்றம்' சார்பில் இலக்கிய போட்டிகள் நடந்தது. ஆறு முதல் ஒன்பது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சாரதாமணிதேவி தலைமை வகித்தார். மாணவர்களுக்கு வினாடி வினா, விவாதம், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு, கவிதை, நாடகங்கள் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.* உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரியில் நடந்த விழாவில் பங்கேற்றனர். யோகா பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி பாராட்டு தெரிவித்தார்.*பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது. மாணவர்கள் பல்வேறு யோகா ஆசனங்களை செய்து பயிற்சி செய்தனர். பள்ளி நிர்வாகத்தினர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.* உடுமலை அரசு மருத்துவமனை சார்பில், தேஜஸ் அரங்கில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் இணை இயக்குனர் டாக்டர் மீரா தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் கலைசெல்வி முன்னிலை வகித்தார். கோவை யோகா கல்லுாரி மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி நடந்தது. மருத்துவர் மாரிமுத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கினார்.உடுமலை பத்ம சூர்யா யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை தலைமை மருத்துவர் நிவேதா 'வாழ்வியல் நோய்களுக்கான யோகா மருத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். உடுமலை அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் ராகவேந்திரசாமி 'இயற்கை மருத்துவம் ஓர் அறிவியல் பார்வை' என்ற தலைப்பில் பேசினார்.* நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்ததுது யோகா தின விழாவில் பள்ளி மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை யோகா வகுப்புகளும் நடக்கிறது. மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து யோகா தினம் கொண்டாடினர்.* உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் திருமூர்த்திமலை பரஞ்ஜோதியார் யோகா கல்லுாரியின் சார்பில் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பூரணி வரவேற்றார். நகராட்சி தலைவர் மத்தீன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் யோகாசனங்கள் செய்தனர். யோகா கல்லுாரி முதல்வர் சண்முகப்ரியா நன்றி தெரிவித்தார்.* உடுமலை சாய்ராம் யோகாலயா சார்பில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகி புருேஷாத்தமன் தலைமை வகித்தார். யோக பயிற்சி வகுப்பின் ஆசிரியர் காளிமுத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

வால்பாறை

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் அமர்ந்து யோகா பயிற்சி செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் யோகா பயிற்சி நடந்தது. வால்பாறை அரசு கலைக்கல்லுாரி, அரசினர் தொழிற்பயிற்சி கல்லுாரியிலும் யோகா பயிற்சி நடந்தது.* வால்பாறை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பிரதீப்குமார் தலைமையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் அர்ச்சனா, ஆயூஷ் சிகிச்சையாளர் ராம்குமார் ஆகியோர் மருத்துவமனை ஊழியர்களுக்கு யோகா குறித்த விழிப்புணர்வும், பயிற்சி அளித்தனர் - நிருபர் குழு -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ