உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொலைதுாரத்துக்கு நெரிசல் பயணம்; பஸ்கள் இல்லாமல் பயணியர் தவிப்பு

தொலைதுாரத்துக்கு நெரிசல் பயணம்; பஸ்கள் இல்லாமல் பயணியர் தவிப்பு

உடுமலை; உடுமலை வழியாக பழநி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்காததால், விடுமுறை முடிந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணியர் மிகுந்த சிரமப்பட்டனர். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை நகரத்துக்கு, திண்டுக்கல், பழநி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போதியளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. வழக்கமான நாட்களை விட, பண்டிகை விடுமுறை நாட்களில், இவ்வழித்தடத்தில், பயணியர் தொலைதுாரங்களுக்கு பஸ்களில் நின்று கொண்டே பயணிக்கின்றனர். சுதந்திர தின விடுமுறையையொட்டி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில்நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டு, திரும்ப வர போதிய பஸ்கள் இல்லாமல் சிரமப்பட்டனர். பழநியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி, கோவை செல்லும் பஸ்கள் அனைத்தும் பயணியர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பயணியர் தொலைதுாரத்துக்கு நின்றபடியே பயணித்தனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கூட்ட நெரிசலில் தவித்தனர். உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் செல்பவர்கள் பஸ் ஏற முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். பழநி முதலே அதிக கூட்டம் இருந்ததால், மடத்துக்குளத்திலும் பெரும்பாலான பஸ்கள் நிற்கவில்லை. அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி, கோவை பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இப்பிரச்னைக்கு தீர்வாக விடுமுறை காலங்களில் உடுமலை வழியாக, கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை போக்குவரத்து கழகத்தால் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், ஒவ்வொரு விடுமுறை சீசனிலும் நுாற்றுக்கணக்கான பயணியர் தவிப்பது தொடர்கதையாகியுள்ளது. இரவு நேரங்களில் குறைந்தளவே பஸ்கள் இயக்கப்படுவதும் இவ்வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை