உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாறுமாறாக கேபிள்கள்: முறைப்படுத்தப்படுமா?

தாறுமாறாக கேபிள்கள்: முறைப்படுத்தப்படுமா?

திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதியில் ரோடுகளில் தாறுமாறாக கடந்து செல்லும் கேபிள்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தொலைபேசி கேபிள், அரசு கேபிள் 'டிவி'; தனியார் கேபிள் இணைப்புகள்; தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பைபர் நெட் கேபிள்கள் என பல வகையான கேபிள்கள் வீதிகள் தோறும் அமைக்கப்பட்டுள்ளன. அலங்கோலம் இவற்றில் ஒரு சில இடங்களில் மட்டும் முறையாக அதற்கான கம்பங்கள் அமைத்து கேபிள் கொண்டு ெசல்லப்படுகிறது. மீதமுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், மின் கம்பங்கள், தெரு விளக்குகள், மரங்கள் உயரமான கட்டடங்கள் என ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் எல்லாம் தாறுமாறாக அமைக்கப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத கேபிள்கள் பெருமளவு இதுபோல் நகரின் பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள், தெருக்கள், சந்து பொந்துகளில் எல்லாம் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. தினமும் அச்சம் இவற்றால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தினமும் அச்சத்துடன் தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள், எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சமயத்தில் சற்று நடவடிக்கை எடுத்தாலும் அதன் பின்னர் வழக்கம் போல் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது நகரம் முழுவதும் இந்த கேபிள்கள் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன. அதிகாரிகள் ஆலோசனை இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கமிஷனர் அமித் தலைமை வகித்தார். துணை கமிஷனர் சுந்தரராஜன், நகர திட்டமிடுநர் சுப்புத்தாய் முன்னிலை வகித்தனர். கேபிள் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அனைத்து பகுதியிலும் நிறுவனங்கள் வழங்கியுள்ள இணைப்புகள், அமைத்துள்ள கேபிள்கள் குறித்த விவரங்களை முறையாக சமர்ப்பிக்கவும், ஆபத்தான நிலையிலும், தாறுமாறாகவும் உள்ள கேபிள்களை முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. விரைவில் மறு ஆய்வு இது குறித்து விரைவில் மறு ஆய்வு கூட்டம் நடத்தப்படும்; அதற்கு முன்னதாக நிறுவனங்கள் தங்கள் கேபிள்களை முறைப்படுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவும் அது குறித்த விவரங்களை அந்த கூட்டத்தில் அளிக்க வேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !