கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
காங்கயம்; காங்கயத்தில் சட்ட விரோதமாக கிராவல் மண், கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.அதில், காங்கயம் முத்துார் ரோடு பிரிவு அருகே அனுமதியின்றி, ஒன்பது யூனிட் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி பிடித்து, வாகன சோதனை செய்தனர். வாகனத்தை பறிமுதல் செய்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தார். காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.