உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

பர்கூர்:கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், பர்கூர் அருகே, மேல் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக, ஐங்குந்தம் கிராமத்திலிருந்து வேலம்பட்டி பகுதிக்கு, கற்களை ஏற்றி செல்வது தெரிந்தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி