உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு

கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் - உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், ம.தி.மு.க., இளைஞரணி சார்பில் துவங்கப்பட்டது. இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.முன்னதாக, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை