உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கோலாகலம்

 கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிேஷகம் கோலாகலம்

உடுமலை: கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவில் மகா கும்பாபிேஷக விழா, சரண கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூர் ஜோதி கோவிலில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷ திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக யாக சாலை பூஜைகள் கடந்த, 22ம் தேதி துவங்கியது. கணபதி ஹோமம், மகா லட்சுமி யாகம், நவக்கிரக ஹோமம், வேத பாராயணம், மகா தீபாராதனை என இரண்டு கால யாக பூஜைகள் சிறப்பாக நடந்தன. கடந்த, 23ம் தேதி, யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு, கோபுர கலசம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம், பக்தர்களின் ஐயப்ப சுவாமி சரண கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து அன்னதானம், சுவாமி திருவீதி உலா நடந்தது. கும்பாபிேஷக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி