உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீசெல்வ கணபதி கோவிலில் இன்று மஹா கும்பாபிேஷகம்

ஸ்ரீசெல்வ கணபதி கோவிலில் இன்று மஹா கும்பாபிேஷகம்

திருப்பூர்; திருப்பூர் - காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, கே.ஆர்.ஈ., லே அவுட் ஸ்ரீசெல்வ கணபதி கோவில் கும்பாபிேஷகம் இன்று நடைபெற உள்ளது.கும்பாபிேஷக விழா, 14ம் தேதி மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கோபூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள், தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது; மாலையில், முதல்கால வேள்வி பூஜைகள் துவங்கியது. மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இன்று காலை 6:30 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜையும், 9:30 மணி முதல், 10:30 மணிக்குள், மஹா கும்பாபிேஷகமும், தொடர்ந்து, கோபூஜை, தசதானம், தசதரிசனம், மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளும், அன்னதானமும் நடக்க உள்ளது.கும்பாபிேஷக விழாவையொட்டி, 'ஆன்மிக பண்புகளை அதிகம் வளர்ப்பது குடும்பமா? கோவிலா?' என்ற தலைப்பில், புலவர் ராமலிங்கம் தலைமையில் நேற்று பட்டிமன்றம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை