| ADDED : பிப் 05, 2024 01:37 AM
அனுப்பர்பாளையம்;திருப்பூர், தொட்டிய மண்ணரை பகுதியில் ரயில்வே கேட் தினமும் 98 முறை மூடப்பட்டு திறக்கப்படுகிறது. பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.தொட்டிய மண்ணரை பகுதியில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால், காலை நேரத்தில் அரசு ஊழியர்கள், பனியன் தொழிலாளர்கள், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கும் பணிகள் அதன் நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது. ரயில்வே சார்பில், பால பணிகள் முடிந்த நிலையில் இரு புறமும் இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் இழுபறி நீடித்து, கிடப்பில் போடப்பட்டுள்ளது.தமிழ் நாடு மின் வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச மாநில இணை பொது செயலாளர் சரவணன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:ரயில்வே கேட் திறந்து ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மூடப்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 98 முறை கேட்டு மூடப்பட்டு திறக்கப்படுகிறது.ரயில்வே மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கும் போது, இணைப்பு சாலைக்கான இடங்கள் அளவீடு செய்யப்பட்டன. இணைப்பு சாலைக்கான நிலம் கையகப்படுத்தி அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.