உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செந்தில் ஆண்டவர் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு

செந்தில் ஆண்டவர் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு

பல்லடம்; பல்லடம் அடுத்த சுக்கம் பாளையத்தில் ஸ்ரீசெல்வ விநாயகர், செந்தில் ஆண்டவர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 7 அன்று நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை வழிபாடு நடந்து வருகிறது.நேற்று, 37வது நாள் மண்டல பூஜை வழிபாடு நடந்தது. விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. திருச்செந்துார் செந்தில் ஆண்டவராக, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மண்டல பூஜைகளில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை