மேலும் செய்திகள்
உத்தரகோசமங்கையில் நாளை மாணிக்கவாசகர் குருபூஜை
28-Jun-2025
திருப்பூர்; ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில், சிவபெருமான் அந்தணராக வந்து, மாணிக்கவாசகர் கூற, ஓலைச்சுவடியில் திருவாசகம் எழுதியதாகவும், மறுநாள், மகம் நட்சத்திர நாளில், மாணிக்கவாசகர் ஜோதியாய் இறைவனுடன் கலந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.ஆனி மாதம் மகம் நட்சத்திர நாளான நேற்று, சிவாலயங்களில் மாணிக்கவாசகர் குருபூஜைநடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த ஜாமபூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், குருபூஜை விழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி துவங்கியது; பகல்,11:30 மணிக்கு, மாணிக்கவாசகர் மகா அபிேஷகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில்எழுந்தருளிய மாணிக்கவாசகர், வெளி மற்றும் உட்பிரகார உலா வந்து, இறைவனுடன் கலந்தார்.கனகசபையில் வீற்றிருக்கும் ஸ்ரீநடராஜருடன் ஜோதியாய் கலக்கும் விழா பூஜைகளை, சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். கோவில் ஓதுவார்மூர்த்தி தியாகராஜன் மற்றும் சிவனடியார்கள், சிவபுராணம் உள்ளிட்ட திருவாசக பதிகங்களை பண்ணிசையுடன் பாடி வழிபட்டனர்.
28-Jun-2025