மேலும் செய்திகள்
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
19-Nov-2024
திருப்பூர்; ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.கலெக்டர் கிறிஸ்துராஜ், விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்து, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு கையெழுத்து பிரசாரத்தில், கையெழுத்திட்டார். 'பெண் கல்வியை ஊக்குவிப்போம்; பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்போம்; பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வோம்; பெண்களே அழையுங்கள், உதவி எண் 181' என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், தென்னம்பாளையம் வரை சென்று திரும்பியது.அனைத்து ஊராட்சி மற்றும் வட்டாரங்களிலும், சமூக நலத்துறை, போலீஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மாவட்ட சட்ட உதவி மையம், தொழிலாளர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வரும் டிச. 23ம் தேதி வரை, மனித சங்கிலி, டார்ச் லைட் ஏந்தி இரவு ஊர்வலம் செல்லுதல், வாகன பேரணி, விளையாட்டு போட்டிகள் நடத்தி, பெண்கள் மீதான வன்முறையை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
19-Nov-2024