மேலும் செய்திகள்
டிச.19ல் அனுமன் ஜெயந்தி உற்ஸவம்
11-Dec-2025
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத உற்சவம், வரும், 16ம் தேதி துவங்குகிறது. ஜன.19ம் தேதி வரை ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி பெருவிழா நடக்கிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஜகத்குரு ஸ்ரீமன் மத்வரச்சாரியார் பரம்பரையில் வந்த ஸ்ரீ வியாஸராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்பு பெற்றது கோவில் இது. கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீவியாஸராஜா பஜனை மண்டபத்தில், மார்கழி மாதம் முழுவதும் காலை, 7:30 மணிக்கு திருப்பாவை உபன்யாசம், உஞ்ச விருத்தியும், மாலை, 6:30 முதல், இரவு, 8:00 மணி வரை கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவும் நடத்தப்படுகிறது. இதை திருச்சி கல்யாணராமன் நிகழ்த்துகிறார். வரும், 19ம் தேதி ஹனுமன் ஜெயந்தியன்று, குன்னுார் உபதலை சுவாமி ஸ்ரீ மேக்நாத் சாய் சாய் நிவாஸின் திவ்ய நாம சங்கீத பக்தி பஜனை மற்றும் ஸ்ரீ தத்வன சைதன்ய சுவாமிஜியின் ஸ்ரீ அருணாச்சல மகிமா குழுவினரின் பக்தி இசை ஞான சொற்பொழிவு நடைபெறுகிறது. அன்றைய தினம், இரவு சுவாமி திருவீதி உலாவின் போது கோதாமுத்து வாத்தியார் அவிநாசியப்பா நினைவு உடற்பயிற்சி சாலை மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் வீர விளையாட்டுகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.
11-Dec-2025