உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆண்டு முழுக்க தேவை தற்காப்பு கலை பயிற்சி

ஆண்டு முழுக்க தேவை தற்காப்பு கலை பயிற்சி

திருப்பூர்; அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வியாண்டு தோறும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. கராத்தே, சிலம்பம் உட்பட ஏதேனும் ஒரு பயிற்சி வழங்கப்படுகிறது. அரசு சார்பில், நிதி ஒதுக்கப்படுகிறது. அதன் வாயிலாக பயிற்சியாளருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் வாரத்தில், இரண்டு நாட்கள் வீதம் ஒரு கல்வியாண்டில், மூன்று மாதங்களுக்கு நடக்கிறது. மூன்று மாதங்கள் மட்டுமே, அதுவும் இரண்டு நாட்கள் என்ற நிலையால் முழுமையான ஒரு பயிற்சி பெற முடிவதில்லை. அரைகுறையாகத் தான் பயிற்சி பெறுகின்றனர். ஒரு கல்வியாண்டில் வழங்கப்படும் பயிற்சி, அடுத்த கல்வியாண்டு துவங்கியதும் மாணவர்களுக்கு மறந்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டியுள்ளது. முக்கிய காரணம், தொடர்ச்சியான பயிற்சி இல்லாததுதான். மாணவர்களுக்கு கல்வியாண்டு முழுவதும், தொடர்ச்சியான தற்காப்பு பயிற்சி அளிப்பதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை