துணை முதல்வருக்கு மேயர் வாழ்த்து
திருப்பூர் : துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதியை, திருப்பூர் மேயர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக துணை முதல்வராக உதயநிதி நேற்று பதவியேற்றார். நேற்று அவரை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.