மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்
04-Jan-2025
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ பரிசோதனை முகாம், நாளை (21ம் தேதி) முதல் வரும் பிப். 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.முதலாவதாக, தாராபுரம் ஒன்றியத்துக்கான மருத்துவ பரிசோதனை முகாம், ஐந்துமுக்கு ரோட்டிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நடைபெற உள்ளது. காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடைபெறும்.கண், காது மூக்கு தொண்டை, நரம்பியல், மனநலம், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிசோதிப்பர். மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். பத்து வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலவாரிய பதிவு, தனித்துவமான ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கான பதிவு விண்ணப்பங்கள் பெறப்படும்.ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கவேண்டும். வரும், 22ம் தேதி, திருப்பூர் அரண்மனைப்புதுார் நடுநிலைப்பள்ளியிலும், 24ம் தேதி மடத்துக்குளம் அரசு பள்ளி, 25ம் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.
04-Jan-2025