உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மிஷ்லின் டயர் ஷோரூம் திருப்பூரில் திறப்பு விழா

 மிஷ்லின் டயர் ஷோரூம் திருப்பூரில் திறப்பு விழா

திருப்பூர்: திருப்பூர், பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் அருகே கார் வேர்ல்டு ஆட்டோமொட்டிவ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டு, அதன் ஒரு பகுதியில் புதிதாக மிஷ்லின் டயர் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது. இதனை மிஷ்லின் விற்பனை இயக்குநர் பிரசாந்த் சர்மா, தெற்கு மண்டல விற்பனை மேலாளர் சந்தோஷ் ராவத், விஷ்யூல் கஸ்டமர் எக்ஸ்பிரியன்ஸ் இயக்குநர் பிரசாத் அதே, மேலாளர் (கணக்கு) சரவணபிரியா ஆகியோருடன் இணைந்து, மாநகராட்சி 43வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினர். இவர்களுடன் உரிமையாளர் ரமேஷ்குமார், அவரது மனைவி வித்யா மற்றும் பணியாளர், நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலகில் பிரபலமான மிஷ்லின் நிறுவனம், நீண்ட நாள் உழைக்க கூடிய, தரமான டயர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அப்படிபட்ட, மிஷ்லின் டயர் நிறுவனத்தின் ஷோரூம் திருப்பூரில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ளது. காருக்கு தேவையான அனைத்து விதமான உதிரிபாகங்களும் கிடைக்கிறது. கூடுதலான விபரங்களுக்கு, 98946 88899-ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை