விற்பனை பாலுக்கு தர நிர்ணயம்; பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
திருப்பூர்; பால் கொள்முதலுக்கு தரம் நிர்ணயிப்பது போல், அதன் விற்பனைக்கும் தரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் கூட்டுறவு பால் சங்கங்களுக்கு பால் சப்ளை செய்யும் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.கொள்முதல் பாலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும். பிற மாநிலங்களைப் போல் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கொள்முதல் செய்யும் பாலுக்கு தர நிர்ணயம் செய்வது போல், விற்பனை செய்யும் பாலுக்கும் தரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் முன் வைத்துள்ளனர்.இவற்றை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நேற்று திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டியில் உள்ள ஆவின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கொளந்தசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். சங்க நிர்வாகிகள், குமார், வேலுசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற பால் உற்பத்தியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்