உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறைந்தபட்ச ஊதிய அரசாணை: தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

குறைந்தபட்ச ஊதிய அரசாணை: தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

திருப்பூர்; பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து பிறப்பித்துள்ள அரசு ஆணை குறித்து, அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேரவையில் விவாதிக்கப்பட்டது.பனியன் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் உள்ள சம்பளத்தை விட குறைவாக வழங்கும் வகையில் குறைந்தபட்ச ஊதிய அரசாணையை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.இதில், சில பிரிவுகள் நுாறு நாள் வேலை திட்டக் கூலியை விட குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், பனியன் தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.பனியன் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தியும் இதன் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையிலும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஐ.என்.டி.யு.சி., நிர்வாகி ஈஸ்வரன் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொது செயலாளர் சம்பத், சேகர் (ஏ.ஐ.டி.யு.சி.,), பாலசுப்பிரமணியம் (எல்.பி.எப்.,), விஸ்வநாதன் (ஏ.டி.பி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,), மனோகரன் (எம்.எல்.எப்.,) ஆகியோர் பேசினர்.பேரவை கூட்டத்தில், ஏராளமான பனியன் சங்க தொழிலாளர்கள் பங்கேற்றனர்.தொழிலாளர் துறை பனியன் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதை ரத்து செய்துவிட்டு அறிவியல் பூர்வமான கணக்கீடு செய்து, குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி தமிழக முதல்வர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், செயலாளர், எம்.பி., உள்ளிட்டோரைச்சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ