உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ரயில் நிலையத்தில் மொபைல்போன் மல்டி சார்ஜிங் போர்டு

 ரயில் நிலையத்தில் மொபைல்போன் மல்டி சார்ஜிங் போர்டு

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருப்போருக்கு மொபைல் போன் சார்ஜிங் போர்டு போதியதாக இல்லை. 2010ல் உருவாக்கப்பட்ட தனி பிளக் பாயின்ட் மட்டுமே, 13 இடங்களில் இருந்தது. ஒருவர் போனுக்கு சார்ஜ் ஏறிய பின், மற்றவர் காத்திருந்து சார்ஜ் போட வேண்டிய நிலை இருந்தது. இதனால் பயணிகளிடம் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக கூட மாறியது. மொபைல் போன் சார்ஜ் போட்டு விட்டு, அமர வழியில்லாமல், போனை கையிலே ஏந்தியபடி நிற்க வேண்டிய நிலை இருந்தது. மல்டி சார்ஜிங் யூனிட் நிறுவ வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அம்ரித் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில்வே ஸ்டேஷன் முதல் மற்றும் இரண்டாவது பிளாட்பார்மில், 21 இடங்களில் மல்டி சர்ஜிங் யூனிட் போர்டு நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பத்து மொபைல் போன்கள் சார்ஜ் போடும் வசதியும், மொபைல் போன்களை வைக்கும் வசதியும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை