சிறுவனுக்கு நுாதன தண்டனை
திருப்பூர்: திருப்பூர், கொங்கு நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த செப். 24ல், 11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கொங்கு நகர் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறவனை கைது செய்தனர். திருப்பூர் இளம் சிறார் நீதிக்குழுமத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு மாதம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் 'டீன்' முன்னிலையில் சமூகப்பணியாற்ற வேண்டும். சிறுவனின் நடத்தை குறித்து டீன் கோர்ட்டுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மை நடுவர் செந்தில்ராஜா, உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.