உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அழைப்பிதழ் வடிவில் பைல்; தொட்டால் மாயமாகும் பணம்

அழைப்பிதழ் வடிவில் பைல்; தொட்டால் மாயமாகும் பணம்

திருப்பூர்; புதிய வடிவிலான மோசடி வழிமுறை சைபர் குற்றவாளிகளால் சில மாதங்களாக பின்பற்றப்படுகிறது. வங்கிகளின் பெயரில் ஏ.பி.கே., எனப்படும் அப்ளிகேஷன் பைலை 'வாட்ஸ்ஆப்' செயலி மூலம் அனுப்பி, அதன் வாயிலாக வங்கி கணக்கிலிருந்து பணம் சுருட்டும் மோசடி நடக்கிறது. வங்கியிலிருந்து அனுப்பியது போல் அதன் பெயர், இலச்சினை, உயர் அதிகாரி போல் கையொப்பம் உடன் வரும் இந்த தகவலை நம்பி, அதில் வரும் இணைப்பை தொட்டால் உடனடியாக அந்த அப்ளிகேசன் வாடிக்கையாளர் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிலிருந்து எளிதாக பணத்தை சுருட்டி விடுகிறது. வங்கிகளின் பெயரில் மோசடிகள் அரங்கேறிய நிலையில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை இது குறித்து எச்சரித்தன. இக்கும்பல் ஏதாவது ஒரு விழாவுக்கான அழைப்பிதழ் அல்லது வாழ்த்து செய்தி என்ற பெயரில் தற்போது இந்த ஏ.பி,கே., பைல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பி வருகின்றன. இதை என்ன ஏது என விவரம் தெரியாமல், ஆர்வத்தில் இதை டவுன்லோடு செய்தால் அதோ கதிதான். இதுபோல் வரும் இணைப்புகளை டவுன் லோடு செய்ய வேண்டாம்; சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை