உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பண இரட்டிப்பு மோசடி விவகாரம்; கமிஷன் பெற்ற ஏஜென்ட் கைது

பண இரட்டிப்பு மோசடி விவகாரம்; கமிஷன் பெற்ற ஏஜென்ட் கைது

திருப்பூர்; காங்கயம், முத்துார் காரையூரைச் சேர்ந்தவர் தீபக் திலக். நிதி நிறுவனம் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் டிபாசிட் வசூலித்தார்.இந்த டிபாசிட்களுக்கு மாதந்தோறும் லாபத்தொகையும், 10 மாதத்துக்குப் பின் முதலீடு செய்த தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்காக பல பகுதிகளிலும் டிபாசிட் பெற ஏஜென்ட்கள் நியமித்தார்.அவர் கூறியபடி இரட்டிப்பு பணம் வழங்கவில்லை. இதனால் டிபாசிட்தாரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்த புகார்களின் பேரில், கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தீபக் திலக் கைதானார்.இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.இதில் நடந்த விசாரணையில், தீபக் திலக், தனது ஏஜென்ட்களுக்கு ஏராளமான கமிஷன் பணம் அளித்தது தெரியவந்தது.இதில் ஒருவரான நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரைச் சேர்ந்த, செல்லசுப்பிரமணி, 58 என்பவர், அதிகம் முதலீடு பெற்றுக் கொடுத்து, தீபக் திலக்கிடம் 11 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்றது தெரிந்தது.பொதுமக்களிடம் மோசடி செய்து, ஏமாற்றி பெற்ற தொகையை அரசுக்கு செலுத்தாமல் செல்லசுப்பிரமணி இருந்தார். திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., முருகானந்தம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அனுபல்லவி தலைமையிலான தனிப்படையினர் செல்லசுப்பிரமணியை நேற்று கரூரில் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவர் சிறையில் அடைக்கப்ட்டார்.கடந்த 2ம் தேதி, இதே போல் கமிஷன் தொகையை திரும்ப செலுத்தாத சித்தோடு பகுதியை சேர்ந்த வீரமணி, கைது ெசய்யப்பட்டார். மேலும் இதில் ஏராளமான ஏஜென்ட்கள் செயல்பட்டதாகத் தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ