உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர்நிலைகளின் தன்மை கண்காணிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை

நீர்நிலைகளின் தன்மை கண்காணிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை

உடுமலை;இனி வரும் நாட்களில் வனத்தில் வறட்சி நிலவும் என்பதால், நீராதாரமிக்க பகுதிகள், வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில், வனவிலங்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆங்காங்கே தடுப் பணைகளும், கசிவுநீர் குட்டைகளும் அமைக்கப்படுகின்றன. இவற்றிற்கு போர்வெல் வாயிலாக, தண்ணீர் எடுத்துச்செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பனிக்காலம் முடிந்து, கோடை காலம் துவங்கினால், இந்த வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, முன்னதாகவே நீராதாரமிக்க பகுதிகளின் நிலையைக்கண்காணிக்கும் வனத்துறையினர், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடுகின்றனர்.வனத்துறையினர் கூறியதாவது: வழக்கமாக, வறட்சி என்பது மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவ நிலை மாற்றம் காரணமாக, பிப்., மாதத்தில் இருந்தே வறட்சியின் தாக்கம் அதிகரிக்கிறது.இதன் காரணமாக, நீராதாரக்கமிக்க பகுதிகள் வறண்டு விடும். தடுப்பணைகள், கசிவு நீர் குட்டைகளுக்கு, லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படும்.அங்கு, வனவிலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் உப்புக்கட்டிகளும் வைக்கப்படும். இதனால், முன்கூட்டியே நீர்நிலைகளின் தன்மை குறித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி