உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நடப்பாண்டில் இயல்பை விட அதிகரித்த பருவ மழை

நடப்பாண்டில் இயல்பை விட அதிகரித்த பருவ மழை

உடுமலை; தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நடப்பாண்டு இயல்பை விட அதிகரித்துள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி பாசன திட்டங்கள், ஏழு குளம் மற்றும் கிணறு, போர்வெல் என இறவை பாசனத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, குளிர் கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றிய நிலையில், முன்னதாகவே துவங்கிய தென்மேற்கு பருவ மழையால், அமராவதி அணை நிரம்பியுள்ளது.பருவ மழையை தொடர்ந்து, நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழையளவு, 618.20 மி.மீ., ஆகும். ஜூன் மாதம் வரையிலான சராசரி மழையளவு, 171.10 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, 205.07 மி.மீ., பெய்துள்ளது.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சராசரி மழையை விட, 33.97மி.மீ., கூடுதலாக பெய்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி