உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

தாராபுரம்; திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 32. இவரது மனைவி சுடர்மணி, 27. தம்பதிக்கு கனிஷ்கா, 10, கார்த்திகேயன், 7 என்ற மகள், மகன் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் சுடர்மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது, அவரது நெஞ்சு பகுதியில் கட்டி இருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மாத்திரை எடுத்து வந்தார்.நேற்று முன்தினம் மகளுடன் வேலைக்கு சென்ற அவர், மார்பு வலி ஏற்பட்டது. இதனால், அரளி விதையை அரைத்து சாப்பிட்டு விட்டு, மகளுக்கு கொடுத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ol4uutd3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொஞ்ச நேரத்தில் சுடர்மணி மயக்கமடைந்தார். அவர் அருகே அழுதுகொண்டிருந்த கனிஷ்காவை பார்த்தனர். விசா ரித்த மக்கள், இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை