உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீரமைக்காத நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சீரமைக்காத நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பல்லடம்: பல்லடம் நகரப் பகுதியில் மைனிங் செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பல்லடம் வழியாகச் செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, அதிக வாகனப் போக்குவரத்து கொண்ட முக்கிய சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலை, சமீபத்தில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் உள்ள சாலை முறையாகப் புதுப்பிக்கப்படவில்லை. குறிப்பாக, பல்லடம் போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, பனப்பாளையம் பகுதிகளில் சாலை மேடு பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. சில தினங்களுக்கு முன், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையில் மைனிங் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். விபத்து அபாயம் உள்ளதால், பல்லடம் நகரப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை