உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  முடங்கிய சாலைப்பணி வாகன ஓட்டிகள் தவிப்பு

 முடங்கிய சாலைப்பணி வாகன ஓட்டிகள் தவிப்பு

திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பிரதான ரோடு, பிரிட்ஜ்வே காலனி விரிவு பகுதி செல்லும் ரோடுகள் பெரும் பரபரப்பான வாகனப் போக்குவரத்து நிறைந்தவையாக உள்ளன. இந்த ரோட்டில் பாதாள சாக்கடை குழாய், குடிநீர் திட்டக்குழாய்கள் பதிக்க குழி தோண்டப்பட்டது. பல மாதங்களாக இந்த ரோடு குண்டும் குழியுமாக மாறி அவதி நிலவியது. தற்போது இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரோடு சீரமைப்பு பணி துவங்கியது. இதற்காக தயார்படுத்தி, ரோடு ஜல்லி கொட்டி சமன்படுத்தும் பணி நடந்தது. அதன் பின் மீண்டும் ரோடு போடும் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பரவிக் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ரோடு போடும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி