உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலை வழக்கு விசாரணை; கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு

கொலை வழக்கு விசாரணை; கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு

பல்லடம்; கடந்த 2024 ஆக., மாதம், சிவகங்கையைச் சேர்ந்த ரவுடி வினோத் கண்ணன் என்பவர், பல்லடம் அருகே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தொடர்புடைய, 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, கோவை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் அடைத்தனர். நேற்று, பல்லடம் ஒருங்கிணைந்த கோர்ட்டில், இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்தது.இதில், தங்கராஜ், 40, தங்கமணி, 46, பிரபுதேவா, 31, சாமிநாதன், 56, ராஜேஷ், 27 , நிதிஷ், 22, காளீஸ்வரன், 27, சுரேஷ், 24 , அஜய் தேவ்கன், 24, எட்வின் ராஜா, 36, ஆதீஸ்வரன், 30 ஆகியோர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.முன்னதாக, தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விசாரணைக்கு ஆஜராவதாலும், ரவுடி கும்பலால், இவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் பல்லடம் கோர்ட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.தீவிர சோதனைக்குப் பின்பே, அனைவரும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணைக்கு பின் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை