உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முத்தான சாதனை

முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முத்தான சாதனை

திருப்பூர், : பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வுகளில், திருப்பூர் - பி.என்., ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில், 490 மதிப்பெண்களுடன் யோகேஷ்வர் பள்ளி அளவில் முதலிடம்; 488 மதிப்பெண்களுடன் குமரன் இரண்டாமிடம்; 486 மதிப்பெண்களுடன் சுபஸ்ரீ மூன்றாமிடம் பிடித்துள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், 589 மதிப்பெண்களுடன் தனுஷா முதலிடம், 566 மதிப்பெண்களுடன் ஹர்ஷினி இரண்டாமிடம், 565 மதிப்பெண்களுடன் கீர்த்தனா மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், கணிதத்தில் 1 மாணவர்; அறிவியலில் 2 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ்1 தேர்வில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா ஒருவர்; தமிழில் 3 பேர்; ஆங்கிலத்தில், 2; இயற்பியலில் 1 மாணவி; கணக்கு பதிவியலில் ஒரு மாணவி; கணினி அறிவியலில் 2 பேர், 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் பசுபதி, முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டினர். இப்பள்ளியில் பிளஸ்1 வகுப்புக்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 89039 93399, 92452 74466 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை