நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டும்
திருப்பூர்: மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்: 16322) இன்று முதல் வரும், 30ம் தேதி வரை, 15 நாட்களுக்கு, திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லாது. அதேநேரம், நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் ரயில் (எண்:16321) மாற்றமில்லை.