உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை கெடு

தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை கெடு

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் இது குறித்து உரிய அறிவுரைகள் வழங்கும் வகையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்துக்கு துணை கமிஷனர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் முருகானந்த், உதவி நகரமைப்பு அலுவலர் சுப்புத்தாய் முன்னிலை வகித்தனர்.தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சுகாதார பிரிவு, நகரமைப்பு பிரிவு, பல்வேறு வர்த்தகர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும், 15ம் தேதிக்குள் கட்டாயம் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி